fbpx

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் பருவ காலம் முடிவடைந்த பின்னரும் மழை ஓய்ந்த பாடில்லை சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, தமிழகத்தில் இந்த மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாளை மறுநாள் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தற்சமயம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் நேற்று வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஆகவே அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 16 சென்டிமீட்டர் மழையும் , அரியலூர் மாவட்டம் திருமானூரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

ஒற்றை இலக்கத்திற்கு வந்த நாட்டின் ஒட்டுமொத்த விலை வீக்கம்! மத்திய அரசு தகவல்!

Wed Dec 14 , 2022
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற அக்டோபர் மாதத்தில் 8.39 சதவீதமாக இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.85 சதவீதமாக இந்த பணவீக்கம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்ததால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருந்தது. […]

You May Like