மதுரை மாநகர் அண்ணா நகர் வெக்காளியம்மன் கோவில் திரு பகுதியில் இருக்கின்ற பெரியார் வீதி பகுதியில் ஒரு இளைஞர் மது குடித்துவிட்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று அதே பகுதியில் மது போதையில் இருந்த அந்த இளைஞர் கையில் மிக நீண்ட அறிவாளுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.மேலும் பொதுமக்களை அவர் மிரட்டியது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோ காட்சியில் அந்த பகுதியில் மிதிவண்டியில் சென்ற ஒரு முதியவரை அறிவாலை காட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி அந்த இளைஞர் மிரட்டுவது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது இது தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் மதுரை மாநகரில் சில தினங்களாக கையில் பயங்கர ஆயுதங்களுடன் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கும் விதத்தில், அலைந்து திரிவதாக இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், கையில் ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.