மயிலாடுதுறை அருகே கணவரின் செல்போனில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்ததால் தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு சென்று திரும்பி இருக்கின்றனர். அப்போது கணவனின் செல்போனை மனைவி எதிர்ச்சையாக பார்த்த போது அதில் பல பெண்களுடன் கணவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சடைந்திருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் தட்டி கேட்டபோது மனைவியை கொடூரமாக தாக்கியிருக்கிறார் கணவர். இதில் அந்த பெண்ணிற்கு கருச்சிதைவும் ஏற்பட்டிருக்கிறது.
கணவருக்கு உடந்தையாக இருக்கும் மாமனாரும் மாமியாரும் இந்தப் பெண்ணை அடங்கி போக சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் வங்கியில் வேலை பார்க்கும் தனது கணவர் உடன் பணி புரிபவர்கள் மற்றும் பல பெண்களுடனும் நெருக்கமாக இருந்து அவற்றை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த ஆதாரங்களை வைத்து அந்த பெண்களை மிரட்டி அவரது ஆசைக்கு இணங்க வைப்பதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகாரின் பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.