fbpx

குடும்பத் தகராறு….! மனைவியோடு சேர்த்து குழந்தைகளையும் கொலை செய்து புதைத்த ரயில்வே ஊழியர்….!

குடும்பம் என்று இருந்தால் குடும்பத்தில் தகராறு வருவது சகஜமான விஷயம்தான். அப்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி எழும் பிரச்சனைகளால் தான் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயமாக யாராவது ஒருவர் இறங்கி போய் பேச வேண்டும். அப்படி இல்லாமல் கோபம் தான் பெரிது என்று ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தால் அந்த சண்டைக்கு முடிவே இருக்காது.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் பகுதியைச் சேர்ந்தவர் சோனு தல்வாடி ரயில்வே ஊழியரான இவர், சென்ற 2 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய 2வது மனைவியுடன் உண்டான தகராறு என்பது அவரை கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் அவர்களுடைய 2 குழந்தைகளையும் கொலை செய்து 3 பேரின் உடலையும் வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார்.

அதன் பின்னர் இயல்பாக நாள்தோறும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார் ஆனால் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என சந்தேகமடைந்த அண்டை வீட்டார்கள் இது தொடர்பாக சோனுவிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதிலை வழங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளனர்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில் காவல்துறையிடம் சோனு தல்வாடே மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்து நண்பரின் உதவியுடன் 3 பேரின் உடலையும் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு 3 உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று காவல்துறையினர் தோண்டி பார்த்தபோது அழகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு உடற் கூர் ஆய்வு செய்தனர்.

அவருக்கு உதவியாக இருந்த நண்பர் மற்றும் சோனு தல்வாடே உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Next Post

கிரேன் கவிழ்ந்து 4 பேர் பலி..!! கோவில் திருவிழாவில் நடந்த சோகம்..!!

Mon Jan 23 , 2023
நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிரேனில் தொங்கியபடி மாலை அணிவிக்க முயன்றனர். அப்போது, திடீரென கிரேன் நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. […]
கிரேன் கவிழ்ந்து 4 பேர் பலி..!! கோவில் திருவிழாவில் நடந்த சோகம்..!!

You May Like