fbpx

விருதாச்சலம் அருகே நீர் தேக்க தொட்டியில் கிடந்த அழுகிய நிலையிலான சடலம்…! காவல்துறையினர் அதிரடி விசாரணை…..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கரன், இவருடைய மகன் சரவணகுமார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் இருக்கின்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

ஆகவே நீர் தேக்க தொட்டியில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நீரை குடிநீராக இந்த பகுதியை சுற்றி இருக்கக்கூடிய 500க்கும் அதிகமான மக்கள் பயன்படுத்து இருப்பதால் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் காணாமல் போனால் சரவணகுமார் சடலமாக கிடந்தார். அதோடு இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அழகிய நிலையில், ஆண் சடலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ராஜேந்திர பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் பால் விலை உயர்வு.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..

Fri Feb 3 , 2023
அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை உயர்த்தி உள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அமுல் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. அமுல் பாலின் அனைத்து வகைகளுக்கும் மாற்றியமைக்கப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, அமுல் தாசா ஒரு லிட்டர் விலை ரூ.54 எனவும், அமுல் கோல்டு […]
ஷாக் நியூஸ்..!! பால் விலை மீண்டும் உயருகிறது..? வெளியான அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

You May Like