fbpx

அவர் ஒரு பச்சோந்தி…..! மின்துறை அமைச்சரை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி……!

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்று கடைசி நாள் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது நான் தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் என்று ஸ்டாலின் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் என்று கூறியிருக்கிறார்

அத்தோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகை தரும் ஸ்டாலின் என்ன திட்டம் கொண்டு வந்தார்? என்று பிரச்சாரத்தின்போது தெரிவிக்க வேண்டும் திமுக ஆட்சியை ஈரோடு மக்களுக்கு அதிமுக கொண்டு வந்த திட்டத்திற்கு ரிப்பன் மட்டுமே வெட்டும் வேலையை செய்து வருகிறது. ஆட்சியை நடத்தாமல் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் மட்டுமே நடத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தி இருக்கிறார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி அதனை தடுத்து நிறுத்துவதற்கு சட்டப் போராட்டம் நடத்தியது அதிமுக அரசுதான் நீட் தேர்வுக்கு விளக்கு பெற அதிமுக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொய்யுரைக்கிறார். திமுகவின் நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நம்பி ஏமாந்து 15 மாணவச் செல்வங்களை நாம் இழந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார் இபிஎஸ்

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்று இரட்டை வேடம் போடுகிற சந்திரபாவாத ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதிமுகவினர் மீது போலியான வழக்கு போட்டு மிரட்டினால் அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம் கொடநாடு குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சி கொடுங்க குற்றம் புரிந்த அந்த நபர்களை ஜாமினில் வெளியே கொண்டு வந்தது திமுக ஆகவே கொடநாடு வழக்கு என்று தெரிவித்து எங்களை மிரட்ட முடியாது.

90 சதவீத வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காகவே சிபிசிஐடி விசாரணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அத்துடன் அதிமுகவின் 10 வருட கால ஒரு கால ஆட்சி தொடர்பாக ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்க தயாரா என்று பன்னீர்செல்வம் சவால் விடுத்தார்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 1,62000 கோடி கடன் பெற்றெடுக்கிறது வரும் காலத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஆப்பு வைக்க உள்ளார். பச்சோந்தி போல நிறம் மாற கூடியவர் தான் செந்தில் பாலாஜி என்று எடப்பாடி பழனிச்சாமி மிக்க கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

Next Post

மோசமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை……!

Sat Feb 25 , 2023
90களில் தமிழ் கன்னடம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி 1990 ஆம் வருடம் வெளியான புதிய காற்று திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை ஆரம்பித்தார். இதன்பிறகு தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம் என்று அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்த […]

You May Like