நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை.
அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு மிக நெருங்கிய நபர்களாலேயே நடைபெறுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.
அந்த விதத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் பிரிஜேஸ் பால் (22) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் பிரிஜேஸ்பால் தெரிவித்துள்ளார். ஆகவே அவரை நம்பி அவருடன் வெகு நெருக்கமாக பழகி உள்ளார். அந்த இளம் பெண் சில தினங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு பிரிஜேஸ்பாலிடம் அந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அந்த நபர் மீது 21 வயதான இளம்பெண் புகார் வழங்கியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மும்பை காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.