fbpx

பிறந்து சில மணி நேரங்களில் ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியை கூட குப்பைத் தொட்டியில் வீச்சு…..! திருச்சி அருகே பயங்கரம்…….!

குழந்தைகளே இல்லை என்று எத்தனையோ தம்பதிகள் தவமாய் தவமிருந்து வரம் வாங்கி குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு கிடைத்த குழந்தை செல்வங்களை ஒரு சிலர் துச்சமாக எண்ணி அவற்றை குப்பை தொட்டிகளில் வீசிச் செல்கிறார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் திருச்சி அருகே நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை எடுத்துள்ள புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் இருக்கின்ற குப்பை தொட்டி ஒன்றில் ஒரு குழந்தையின் அழுகுறல் கேட்டிருக்கிறது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு குப்பை தொட்டியில் பார்த்தபோது அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு பெண் குழந்தை அழுது கொண்டு இருந்தது. இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்களை நினைத்து பொதுமக்கள் வேதனையடைந்து கல்லக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறை உதவியுடன் கிராம மக்கள் அந்த குழந்தையை நீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றி அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லக்குடி காவல் துறையினர் குப்பைத் தொட்டியில் வீசி சென்ற குழந்தை பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி சென்றார்களா? இந்த செயலை செய்தது யார்? இந்த குழந்தை யாருடையது? இந்த குழந்தை தவறான வழியில் பிறந்த குழந்தையா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய கோமாளி..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!! என்ன காரணம்..?

Mon Feb 27 , 2023
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முக்கியமான கோமாளி ஒருவர் வெளியேறுகிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் வெளியாகும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது 4-வது சீசன் வரை ட்ரெண்டிங்கில் வருகிறது. இதில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் […]

You May Like