fbpx

எது வேணா எப்படி வேணா மாறும்… அதிபர் இருக்கையில் அமர்ந்து செல்பி எடுத்து குடிமக்கள்…!

இலங்கை அதிபர் மாளிக்கையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் இருக்கையில் ஒவ்வொருவராக அமர்ந்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்ற மகிந்த ராஜபக்சவை மக்கள் துரத்தியடித்தனர். மக்களின் தன்னிலை கடந்த போராட்டத்தால், உயிரை கையில் பிடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்ச தப்பியோடினார். இதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல சில முயற்சிகளை எடுத்தார். பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பெரிய அளவில் அதற்கு பலன் ஏதும் இல்லை.

இதனால் மின்வெட்டு, பசி, பட்டினி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சூழல்களை பல்லைக் கடித்துக் கொண்டு பொருத்திருந்த மக்கள் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் தனது சகோதரனை போல அவரும் பதவியை விட்டு‌ விலக மறுத்தார். இந்த நிலையில்தான் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நேற்று சென்றனர். மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் இருந்த போதிலும் அதிபர் மாளிகை முழுவதையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு சென்று கோத்தபய ராஜபக்சவை தேடினார்கள்.

அதிபர் மாளிகையின் உள்ளே சென்ற பொதுமக்கள் அதிபரின் கட்டிலில் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்தனர். அது போல் அதிபர் மாளிகையில் இருந்த உணவை சுவைத்தனர். அங்கு ஒரு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்தனர். பலர் நீச்சல் குளத்தில் இறங்கி குளியல் போட்டனர். ஒரு சிலர் ஜனாதிபதியின் குளியல் அறையையும் பயன்படுத்திய காட்சிகள் வைரலானது. இந்த நிலையில் அதிபரின் இருக்கையில் ஒவ்வொருவராக அமர்ந்து செல்பி எடுக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு ஸ்டைலில்... அசத்தலான ஒரு பஞ்சாயத்து தீர்ப்பு...!

Sun Jul 10 , 2022
அசாமில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பஞ்சாயத்தார் உத்தரவின் படி மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம், நாஹோன் மாவட்டம், லாலுங் கிராமத்தில் வசித்து வந்தவர் சபிதா (35) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சபிதாவை கடந்த வாரம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகப்பெரும் […]

You May Like