fbpx

வருமானவரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்……!

தொழிலதிபர் சேகர் ரெட்டி அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ,சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

2015-16ஆம் மதிப்பீட்டு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாயும 2017-18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானவரித் துறையின் இந்த நோட்டீஸின் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரி துறையின் நோட்டீஸ்க்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், வருமானவரித் துறையின் மதிப்பீட்டு உத்தரவு போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரி துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரி துறையில் மேல்முறையீடு செய்திருப்பதால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கினார்.

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…..! வெற்றி யாருக்கு……?

Thu Mar 2 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக திருமகன் ஈவேரா இருந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களும், அதிமுக கூட்டணியின் சார்பாக […]

You May Like