விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் சுஜிதா, குமரன், ஸ்டாலின் முத்து, வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
தற்சமயம் இந்த கதைகளத்தில் ஜீவா மற்றும் மீனா கண்ணன், ஐஸ்வர்யா உள்ளிட்ட இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா. இவர் இதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் சிற்ப்பிக்குள் முத்து என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரேசர் என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல் கிடைத்திருக்கிறது, இதன் காரணமாக, அவருக்கு சக நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.