தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சின்னதுரை சங்கரம்மாள் என்ற தம்பதியரின் மகளுக்கும், புதுப்பட்டியைச் சார்ந்த லாரி ஓட்டுநர் காளிமுத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல காதலாக மாறியிருக்கிறது. மகளின் காதல் விவகாரம் தெரிய வந்ததை தொடர்ந்து, பெற்றோர்கள் அவரை கண்டித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த காரணத்தால், இவர்களுடைய காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் காதலனை கரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, அந்த இளம் பெண் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனால் மணமுடைந்து போன தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும் தந்தை சின்னதுரை அடைக்கலாபுரம் என்ற பகுதியில் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.