fbpx

தமிழக மக்களே தொடங்கியது கோடை காலம் அனைவரும் கவனமாக இருங்கள்….! குறிப்பிட்ட இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் சுகாதாரத்துறை எச்சரிக்கை…..!

பொதுவாக தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் காணப்படலாம். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகமாக காணப்படும்.

ஆனாலும் இந்த வருடத்தில் இந்த மாதங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், வெப்பத்தின் தாக்கமும் கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் போன்றோர் இந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Next Post

நெருங்கியதா ரஷ்ய அதிபரின் மரணம்…..? பீதியில் குடும்பத்தினர் என்ன ஆனது புட்டினுக்கு…..?

Wed Apr 12 , 2023
ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மறுத்து போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளனர். தற்போது […]

You May Like