fbpx

தாதாவை கொலை செய்ய திட்டமிட்ட குட்டி தாதாக்கள்! கொத்தாக தூக்கிய காவல்துறை!

திரைப்படங்களில் தான் கேங்ஸ்டர்கள், தாதாக்கள் உள்ளிட்டோர் கெத்தாக நகரங்களில் வலம் வருவார்கள்.இது போன்ற காட்சிகளை நம்மால் தமிழ் திரை துறையில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைத்திருந்த நிலையில், தற்போது நிஜ வாழ்விலும் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கண்காணிப்பு பணியில் காவல்துறையை தீவிர பிடத்தை வருகின்றனர். அவ்வப்போது திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றன. அதேபோல செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவதுண்டு.

அந்த இடத்தில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட ராட்டின கிணறு என்கின்ற பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், அப்போது 2️ இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான விதத்தில் 5️ பேர் வருகை தந்துள்ளனர். காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த 5️ பேர் தொடர்பாக விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் வழங்கியதால் காவல்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே 5️ பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காவல்துறையை சார்ந்தவர்கள் அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், செங்கல்பட்டு, கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம், நகரைச் சேர்ந்த பொற்கனல், சென்னை கேகே நகரை சேர்ந்த மனிஷ்குமார், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோர் என்பதும், தெரியவந்தது.

இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ்குமார் உள்ளிட்ட 2️ பேர் மீதும் இதற்கு முன்பே சில வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. மகேஷ்குமார் சென்னையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 5️ பேரும் எதற்காக செங்கல்பட்டு பகுதியில் சுற்றி வந்தார்கள்? என்று காவல்துறையினருக்கு சந்தேகம் உண்டானது. ஆகவே ஐவரிடமும், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவர்களுடைய கைபேசியை பறிமுதல் செய்து கைப்பேசி அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

கடைசியாக சென்னை கே.கே நகர் பகுதியில் இருக்கின்ற ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த அனைவரும் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஆகவே அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர் ஐந்து பேரிடமும் வாக்குமூலம் வாங்கி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ஒருவரை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டிய 5️ பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

பொங்கல் பண்டிகைக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

Thu Dec 29 , 2022
அரசின் எந்தவித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு வரும் பொங்கலுக்குள் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதுச்சேரியில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூ.2,400 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதுபோல், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத […]

You May Like