சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கின்ற கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்களை கல்லூரியில் பயிலும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளீர் ஆணையம் சார்பாகவும், காவல்துறையினரின் சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்சித் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாணவிகள் வலியுறுத்தி இருந்தார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டப்பேரவையிலும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள்.
அப்போது இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை பொருத்தவரையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சரியான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கு நடுவில் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கி இருந்தார். அதில் பேராசிரியர் ஹரி பத்ய்மன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும் படிப்பு முடிந்த பின்னரும் தனக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.
அதோடு இந்த வழக்கு குறித்து ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்தார்கள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 30ஆம் தேதி மாணவ, மாணவிகளுடன் ஹரி பத்மன் ஹைதராபாத் சென்றிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
ஆகவே நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பியவர் தலைமுறை ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், நேற்று காலை பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்து இருக்கிறார்கள்