fbpx

வளர்ப்பு தந்தை செய்த அருவருக்கத்தக்க காரியம்….! தாயிடம் கூறி கதறி அழுத சிறுமி…..!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியை பெயிண்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதை கேட்ட தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Post

நள்ளிரவில் கேட்ட மாணவியின் அலறல் சத்தம்..!! ஓடிவந்த குடியிருப்பு வாசிகள்..!! பொள்ளாச்சியில் பயங்கரம்..!!

Wed May 3 , 2023
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கெளரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. குடியிருப்பில் இருந்த வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த மகாலிங்கபுரம் போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், […]

You May Like