கடந்த 2019 ஆம் வருடத்தில் பொள்ளாச்சியை ஒட்டி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியரின் சகோதரர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறையும் அதன் பிறகு சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தனர். இதில் திருநாவுக்கரசு, சபரி, ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், பொள்ளாச்சி, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு, அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் 9 பேர் மீது தனியாக வழக்கு பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேதி வந்து நேற்று முன்தினம் காணொளியின் மூலமாக விசாரணை நடந்தது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற 9 பேரும் காணொளியின் மூலமாக ஆஜராகினர்.
அரசு தரப்பு சாட்சி நேரில் ஆஜரானவுடன் இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட இந்த சாட்சி விசாரணை மூடிய நீதிமன்ற அறையில் நடந்தது. மற்றொரு சாட்சி அடுத்த மாதம் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.