fbpx

குடிபோதையில் கர்ப்பிணி பெண்ணின் மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர்….! பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண் டெல்லியில் பரப்பரப்பு……!

வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்க கூறிய கர்ப்பிணி பெண் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு முப்பது இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் ரஞ்சுவுக்கு தூக்கம் வரவில்லை. அதன் காரணமாக, மாடிக்கு சென்ற அவர் பாடல் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இளைஞர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று துப்பாக்கியை எடுத்த ஒரு இளைஞர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

இது காயம் அடைந்த கர்ப்பிணி பெண்ணான ரஞ்சு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ராஜுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிக ரத்தப்போக்கு உண்டானதால் ரஞ்சிவின் வயிற்றில் இருந்த 8 மாத சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறிப்பு இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Post

கொரோனா 4-வது அலையா..? தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..? மருத்துவத்துறை அமைச்சர் விளக்கம்..

Tue Apr 11 , 2023
கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4-வது அலையாக கருத முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசின் நிலைபாட்டை அறிய விரும்புவதாக கூறிய இபிஎஸ், தேவையான மருந்துகள் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவற்றில் […]

You May Like