ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு பஞ்ச வர்ணம்என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பஞ்சவர்ணம் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில், சிவகுமாருக்கும், பஞ்ச வர்ணத்துக்கும், அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இதில் பஞ்சவர்ணம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பஞ்சவர்ணத்தின் பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர், பஞ்சவணர்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான எட்டு மாதத்தில் பஞ்சவர்ணம் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.