fbpx

குடிகார கணவனை வெந்நீர் ஊற்றி கொலை செய்த மனைவி…..! அதிர்ந்து போன நீதிமன்றம்….!

நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள இடையந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (44) கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி காமாட்சி (40) இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், முருகனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. ஆகவே தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வருவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தம்பதிக்கிடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த காமாட்சி வெந்நீரை எடுத்து முருகன் மீது ஊற்றி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்த நபர்கள் மீது வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே அவர் பரிதாபமான முறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வாலாஜா காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து காமாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வடக்கு விசாரணை ராணிப்பேட்டை 2வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது இந்த நிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்னிலையில் கடந்த 24ஆம் தேதி நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த அவர் காமாட்சிக்கு 5 வருட கால சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் காமாட்சியை அழைத்துச் சென்று வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Next Post

மீன் பிரியர்களே உஷார்.. அதிகளவில் ரசாயணம் கலப்பு.. மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்..

Fri Jan 27 , 2023
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நீனா மாம்பில்லி.. புற்றுநோயியல் நிபுணரான இவர், வழக்கமான வாங்கும் கடையில் இருந்து மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனில் ஏதோ பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்த அவர், அவற்றை ஆய்வகத்தில் பரிசோதிக்க முடிவு செய்தார்.. ஆய்வின் முடிவில் அந்த மீன் துண்டுகளில்ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.. ஃபார்மலின் என்பது உணவுப் பொருட்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.. இது இறுதிச் சடங்குகள் மற்றும் […]

You May Like