fbpx

தற்கொலை செய்து கொண்ட நடன இயக்குனர் கொலையா தற்கொலையா….? காவல்துறையினர் தீவிர விசாரணை….!

அது சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி, அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் ஒரு மனிதன் முறையற்ற உறவில் இருக்கிறான் என்றால் நிச்சயமாக அது அவனுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும்.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கின்ற அல்லிக்குளம் மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகனான நடன இயக்குனர் ரமேஷ் (42) சிறுவயதில் இருந்து சினிமாவை பார்த்து நடனத்தை கற்றுக்கொண்டு மேடை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டு நடனமாடி வந்தார். அப்போது இவருடன் 11 வயதில் நடனமாடிய சித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் 13 வயதில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெனிபர் (25), சானோஃபர் (22) என 2 மகள்கள் இருக்கிறார்கள் அவ்வப்போது அல்லிக்குளம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள் பங்கிட்டு கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாக மாறினார் ரமேஷ்.அதன் பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர், அஜித் நடித்த துணிவு உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு, சிறு வேடத்தில் நடன காட்சிகளில் ரமேஷ் நடித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் சென்ற 10 வருடங்களுக்கு முன்னர் கண்ணப்ப திடல் மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இன்பவள்ளி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது அவருடைய மனைவிக்கு தெரியாததால் ரகசியமாக வாழ்ந்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் மனைவி சித்ராவிற்கு தெரிய வந்தவுடன் கணவன், மனைவி இருவரும் தகராறு செய்திருக்கிறார்கள். சித்ராவின் உறவினர்கள் சில வருடங்களுக்கு முன்னர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்பவள்ளியிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் ரமேஷ் தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வந்தார். ஆகவே சென்ற 3 மாதங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வரும் இன்ப வள்ளியுடன் ரமேஷ் வாழ்ந்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் ரமேஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்பவெளியிடம் மது குடிப்பதற்கு 500 ரூபாய் பணம் கேட்டதாகவும் பணம் கொடுக்க மறுத்து விட்டதால் விரக்தியில் கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் இருந்து ரமேஷ் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பாக இன்பவள்ளி சித்ராவிடம் ரமேஷ் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். சம்பவம் தொடர்பாக ஃபேஷன் ஃப்ரிட்ஜ் காவல்துறையினர் விரைந்து சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக சித்ராவின் சகோதரி அமுல் ராணி தெரிவிக்கும் போது நேற்று மாலை கேபி பார்க் குடியிருப்புக்கு 4 பேர் வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

அப்போது டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று கேட்டு அவரிடம் நடனம் கற்றுக் கொள்வதற்காக வந்ததாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரமேஷ் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அந்த 4 பேரை காணவில்லை என்று சந்தேகம் தெரிவித்து இருக்கிறார் .ரமேஷ் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அமுல் ராணி தெரிவித்துள்ளார்.

ரமேஷ் உயிரிழப்பு சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக தெரிவித்ததால், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த அவருடைய சடலம் தலை பகுதி மற்றும் உடல் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர் தானாக மேலிருந்து விழுந்தாரா? அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஓய்வு வயது 62-ல் இருந்து 65ஆக உயர்வு... வைரலாகும் செய்தி.. விளக்கம் அளித்த ஆந்திர அரசு..

Sun Jan 29 , 2023
அனைத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் போலியான அரசாணையை பரப்பிய நபர்கள் மீது ஆந்திர அரசின் நிதித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. . அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் ஆந்திர அரசின் பெயரில் ஒரு தகவல் வைரலானது.. அதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 62-ல் […]

You May Like