தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அழகு பாண்டியின் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே இவர் மட்டும் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.
அழகு பாண்டி பல்வேறு வழக்குகளில் தேடப்படுவதால் அவர் ஆந்திராவுக்கு சென்றதைத் தொடர்ந்து, அவருடைய மனைவி தன்னுடைய குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்துள்ள மேல உரங்கான்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அழகு பாண்டி மீதான வழக்கு விசாரணையின்போது, தொடர்ச்சியாக அவர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக சென்ற சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு வந்தார்.அழகு பாண்டி அவர் வந்திருந்ததை அறிந்து கொண்ட சில மர்ம நபர்கள் அவரை கொல்ல திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் அழகு பாண்டி நேற்று முன்தினம் இரவு அவருடைய மாமனார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் சில மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டி இருக்கிறார்கள்.
ஆனால் சந்தேகத்துடனே கதவை திறந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் திடீரென்று வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அழகு பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. படுகாயம் அடைந்த அழகு பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தார்.இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்