விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தைச் சார்ந்த 6 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
. இது குறித்து பள்ளி ஆசிரியர் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நலஅலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சிறுமிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணைத்ததில் எங்களுடைய பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் என்னைப்போல 4 சிறுமிகளுக்கு அவர்கள் பாலியல் தொந்தரவு வழங்கி வந்ததாக அதிர்ச்சி தகவலை அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனைத்து மகளிர் காவல் நிலைய த்தில் புகார் வழங்கினார்.இந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் வழங்கியிருந்தது தெரியவந்தது.
அதோடு அந்த சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காட்டி, ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்கள் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்