இந்த கால இளம்பெண்களும் சரி, இளைஞர்களும் சரி தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எடுக்கும் சில முடிவுகள் இறுதியில் அவர்களுக்கு துன்பத்தையே தருகின்றன.அப்படி அவர்கள் அலட்சியத்துடன் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டும் துன்பத்தை கொடுத்தால் பரவாயில்லை. மாறாக அவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்து இவர்கள் எடுக்கும் முடிவானது துன்பத்தில் தள்ளி விடுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் மனோஜ் இவருடைய மகன் விஷ்ணு(19). இவர் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாதிரி தேர்வு முடிவடைந்த நிலையில், சொந்த ஊருக்கு போகாமல் அந்த விடுதியிலேயே தங்கி இருந்த மாணவன் விஷ்ணு நேற்று இரவு வெகு நேரமாகியும் உணவு சாப்பிட வருகை தராததால் விடுதியில் இருக்கின்ற சக மாணவர்கள் அவரை அழைத்து வருவதற்காக அறைக்கு சென்றுள்ளார்கள்.
![கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை](https://1newsnation.com/wp-content/uploads/2020/10/Sucide.jpg)
ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஜன்னல் மூலமாக உள்ளே பார்த்தபோது மாணவன் விஷ்ணு தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். அதன் பிறகு கல்லூரி நிர்வாகத்திடம் இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
ஆனால் மாணவன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் இது தொடர்பான விபரத்தை தெரிவித்தும், வெகு நேரம் ஆன பின்னரும் கூட கல்லூரி நிர்வாகம் சார்பாக யாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்காமல் அலட்சியத்துடன் இருந்ததாகவும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
![இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா? - உயர்நீதிமன்ற கிளை](https://1newsnation.com/wp-content/uploads/2022/02/deadbody-found-underground.jpg)
ஆனால் மாணவன் விஷ்ணு தற்கொலை தொடர்பான தகவல் மின்னல் வேகத்தில் பரவியதால் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் அந்த பகுதியில் திரண்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், மாணவனின் தற்கொலை தொடர்பான தகவலை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும், கல்லூரி நிர்வாகம் சார்பாக எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மாணவர்கள் குற்றம் சுமத்தி, மாணவன் விஷ்ணுவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்து, கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று கல்லூரியின் நுழைவாயிலின் முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், அந்த கல்லூரி மாணவன் விஷ்ணு காதல் தோல்வியின் காரணமாக, தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி உதவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிருந்தா, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவன் விஷ்ணுவின் இறப்பு தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து, கல்லூரி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும் அந்த பகுதியில் இன்னமும் பதற்றம் தனியாத நிலையில், உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.