மதுப்பழக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்து வருகிறது என அரசாங்கத்திற்கும் தெரியும், பொது மக்களுக்கும் தெரியும் மதுவை குடித்துக் கொண்டிருக்கும் குடிமகன்களுக்கும் தெரியும். எவ்வளவு ஏன்? அந்த மது பாட்டிலேயே மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் எழுதப்பட்டு தான் விற்பனையாகிறது. ஆனால் அவனை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு குடிமகன்கள் அதையே குடிக்கிறார்கள்.
இந்த மதுவின் காரணமாக, பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் அரசாங்கம் சார்பாக நிதி உதவி என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்கப்பட்டாலும், அந்த பணம் அனைத்தும் அப்படியே மீண்டும் டாஸ்மாக் கடை மூலமாக அரசு கஜானாவிலேயே தான் சேருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி ஆட்சியில் இருப்பவர்கள் அரசுக்கு வரும் வருமானத்தை மட்டும் தான் பார்க்கிறார்களே தவிர, இந்த குடிப்பழக்கத்தால் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
அந்த வகையில், வியாசர்பாடி சாந்தி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் கண்ணகி (40) இவருடைய மகன் அஜய் (21) பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவர் மகா சிவராத்திரிக்காக மாலை அணிவித்திருக்கிறார். அஜய் நேற்று முன்தினம் அதிகாலை மதுவின்போதையில் வீட்டில் தகராறு செய்து நடனமாடி இருக்கிறார் இது குறித்து அக்கம்பக்கத்தினர் கண்ணகியிடம் புகார் வழங்கியுள்ளனர்.
ஆகவே கண்ணகி தன்னுடைய மகனிடம் ஏன் சத்தம் போடுகிறாய்? மாலை அணிந்து கொண்டு இப்படி மது அருந்தலாமா? என கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அஜய் பீர் பாட்டிலால் கண்ணகியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் கண்ணகி பலத்த காயமடைந்து விட்டார் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கண்ணகியை இணைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் என்ற நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக எம்கேபி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தாயை கொலை செய்ததாக அஜய்யை கைது செய்தனர் அதன் பிறகு அவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்