நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65) விவசாயியான இவருடைய மகன் கருணாநிதி (45) இந்த நிலையில், கருணாநிதிக்கும் அவருடைய மனைவி புனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, கணவரை விட்டு புனிதா பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என்று தெரிவித்து கருணாநிதி தந்தையிடம் அடிக்கடி தகராறில்ப்ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது,
இந்த சூழ்நிலையில், எப்போதும் போல கருணாநிதி தந்தை பன்னீர்செல்வத்திடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது இதில் ஆத்திரம் கொண்ட கருணாநிதி, தான் சட்ட விரோதமாக வாங்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தன்னுடைய தந்தை என்று கூட பார்க்காமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டு இருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்து இருக்கிறார்.
அப்போது துப்பாக்கி குண்டுகள் குறி தவறி அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் பாய்ந்தது. இதன் காரணமாக, அதிர்ஷ்டவசமாக பன்னீர்செல்வம் உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் சென்று இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகார் வழங்கினார் அதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.
அத்துடன் வேம்பதேவன் காடு புளியங்குளத்தில் கிடந்த நாட்டு கள்ளத் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்ப தகராறு காரணமாக, தந்தையை மகன் கல்லு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.