fbpx

குடிக்க பணம் தராததால் தாயின் தலையை கோடாரியால் பிளந்த மகன்.. பதறவைக்கும் சம்பவம்..!!

தேனி மாவட்டம் தேவனாம்பட்டி ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஜோதிலட்சுமி இவர்களின் மகன் மருதுபாண்டி(23). கூலி வேலை செய்து வரும் இவர் குடி போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனிடையே நேற்று மருதுபாண்டி, ஜோதிலெட்சுமியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிலட்சுமி பணம் தர மறுத்ததால் கோபமடைந்த மருதுபாண்டி வீட்டில் வைத்திருந்த கோடாரியை எடுத்து ஜோதிலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதனால் ஜோதிலட்சுமியின் தலையில் பலத்த காயமடைந்தது.

இதனை கேள்விப்பட்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து அறிந்த தேவனாம்பட்டி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

மேலும்,ஜோதிலட்சுமியின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் மருதுபாண்டியை கைது செய்து அவரை விசாரணை செய்து வருகின்றனர். குடிக்க பணம் தராததால் பெற்ற தாயையே கோடாரியால் தலையில் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Post

சிறுநீரகம் தந்தால் ரூ.7 கோடி பணம் தருவதாக சிறுமியிடம் நூதன மோசடி.. அதிர்ச்சியளிக்கும் பின்னணி..!

Wed Dec 14 , 2022
ஹைதராபாத்தில் இன்டர்மீடியட் படித்து வரும் 16 வயது சிறுமி, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள ஃபிரங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். சமீப காலமாக இவருக்கு ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதால் அவரது தந்தை செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சிறுமி செல்போன் மூலம் படிப்பது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவே 2 லட்சம் வரையிலும் வீண் செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இது தனது தந்தைக்கு தெரிந்துவிட்டால் திட்டுவார் என […]

You May Like