fbpx

திமுக கவுன்சிலரின் மகனுக்கு அரிவாள் வெட்டு….! திருவள்ளூர் அருகே பரபரப்பு…..!

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர திமுக துணைச் செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன் இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஒரு ஆங்கில மருந்து கடையில் நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

திருவள்ளுவர் நகரில் ஜே என் சாலையில் அமைந்திருக்கின்ற அவருடைய மருந்து கடையை திறப்பதற்காக கலைவாணன் வருகை தந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெறித்தனமாக கத்தியால் வெட்டி இருக்கிறது. வெட்டு காயங்களுடன் அலறல் சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

சென்ற வாரம் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையின் விளைவு காரணமாக, இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஆபத்தான நிலையில், கவுன்சிலரின் மகன் கலைவாணன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இவரை வெட்டியவர்கள் யார் என்று இதுவரையில் தெரியாததால் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Next Post

சென்னை மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு…..! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!

Sat May 6 , 2023
இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த விதத்தில் தென்னிந்தியாவில் சென்னை மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பெங்களூர் வழிதடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை […]

You May Like