fbpx

போதை பொருளை ஒழிப்பேன் என்று ஸ்டாலின் சொல்வது வெறும் விளம்பரம் தான்… செல்லூர் ராஜூ..!

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்பொழுது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது,

நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றும் பாக்கியத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும், தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக எல்லோருடைய வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தென்பாண்டி மண்டலம் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு தேசப்பற்றை ஊட்டும் விதமாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை பிரதமர் நமக்கு அளித்துள்ளார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் செல்வாக்கு சரிந்து விட்டது. இன்று தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் மயமாகவே இருக்கிறது. பெரியவர்கள், மாணவர்கள் மட்டுமே போதைக்கு அடிமையாக இருந்த நிலையில் இப்போது மாணவிகளும் போதைக்கு அடிமையான நிலை உருவாகியுள்ளது. மேலும் போதைப் பொருளை ஒழிக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெறும் விளம்பரம் மட்டும் தான். திமுக தேர்தல் காலத்தில் சொன்ன மது ஆலைகளை மூடுவோம், மதுவிலக்கை கொண்டு வருவோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் போதைப்பொருள்களை காவல்துறை உதவியில்லாமல் விற்க முடியாது. தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். எங்கள் ஆட்சியின் போது மதுவால் அவல நிலை சம்பவகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மதுவால் அவலநிலை தலை விரித்தாடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Baskar

Next Post

நீங்களும் தொழில் தொடங்க வேண்டுமா...? தமிழகத்தில் வரும் 17-ம் தேதி முதல்...! அரசு முக்கிய அறிவிப்பு...!

Sun Aug 14 , 2022
தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது‌. இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் […]

You May Like