fbpx

மாணவச் செல்வங்களே இது உங்களுக்கான செய்தி தான்! அரையாண்டு விடுமுறை எப்போது தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள்.

அந்த வகையில், மாணவச் செல்வங்களுக்கு படிப்பை தவிர்த்து மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அப்படி கவலையற்ற மனநிலையில் நாமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கச் செய்கிறார்களே தவிர அப்படி எந்தவிதமான கவலையும் இல்லாமல் இங்கு யாருமே இருக்க முடியாது.

அந்த வகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் தற்சமயம் அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வரையிலும் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ம் தேதி வரையில் இருக்கின்ற 9 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுமுறை முடிவடைந்து ஜனவரி மாதம் 2ம் தேதி மறுபடியும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழ்நாட்டில் எதிர்வரும் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! மீனவர்களுக்கான கடும் எச்சரிக்கை!

Sat Dec 17 , 2022
இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில், உள் தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது […]
#Alert..!! நெருங்கும் புயல்..? தமிழகத்தில் நவ.11 வரை இடி மின்னலுடன் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

You May Like