கடந்த மாதம் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
ஆகவே நேபாள நாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதர் அந்த நாட்டின் அதிபராக சென்ற மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக, சென்ற திங்கள் கிழமை திரிபுவனம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை அங்கே பரிசோதித்த பொருத்தவர்கள் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இந்த செய்தியை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இத்தகைய நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.