மேடையும், ஒரு மைக்கும் கிடைத்துவிட்டால் போதும் இந்த அரசியல்வாதிகள் பெண்கள் தொடர்பாகவும், பெண் உரிமை தொடர்பாகவும், பெண் சுதந்திரம் தொடர்பாகவும் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள்.
ஆனால் இவர்கள் பேசும் இந்த வசனம் நடைமுறையில் கொஞ்சமும் சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் பொதுமக்களின் வாக்குகளை கவர்வதற்காக இது போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.ஆனால் அந்த மேடை தவிர்த்து வெளியில் பார்த்தால் பெண்களின் நிலை இன்னும் படுமோசமாகத்தான் இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பூனம் குமாரி(20). நேற்று இவர் தன்னுடைய சொந்த மாநிலத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருக்கிறார். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போந்தூர் கிராமத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக ஓரக்கடம் பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய ஊர்காரரான வினைகுமார் மற்றும் சேலத்தை சேர்ந்த சூப்பர்வைசர் தமிழரசன்(23) உள்ளிட்டோருடன் புனம்குமாரி ஒரகடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த சூப்பர்வைசர் தமிழரசன் பூனம் குமாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து பயந்து போன பூனம்குமாரி கத்தி கூச்சலிட்டு, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே குதித்திருக்கிறார். இதில் அவருக்கு 2 கைகளிலும் சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் சூப்பர்வைசர் தமிழரசனை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை இடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் சூப்பர்வைசர் தமிழரசன் மற்றும் பூனம்குமாரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தமிழரசனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.