ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் மண்டல் பகுதியைச் சேர்ந்த சலபதி( 33) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. இந்த நிலையில் தான் அவர் வேலை பார்க்கும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து ராணியை போல் வைத்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் அந்த மாணவியும் அவருடைய பேச்சுக்கு மயங்கி உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், பள்ளியில் நடைபெற்ற இறுதித் தேர்வு முடிவடைந்த உடன் அந்த மாணவியை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே அந்த மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். திருமணம் நடந்த ஒரே நாளில் ஆசிரியரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து கொண்ட அந்த மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
ஆசிரியர் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்து கொண்ட மாணவி தன்னுடைய பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்து கதறையுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த ஆசிரியர் மீது கங்காபுரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரின் அடிப்படையில் சலபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்