உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுடைய கருத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
கடந்த 2014 ஆம் வருடம் 6 வயது சிறுமி ஒருவரை அவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறுமியின் கழுத்தை அறுத்து கழிவுநீர் ஓடையில் வீசியிருக்கிறார். ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் ரவீந்திரகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2015 ஆம் வருடம் ரவீந்திரகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணை 30க்கும் அதிகமான குழந்தைகளை கடத்திச் சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரே கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஒரு இடத்தின் ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பின்னர் அதே இடத்திற்கு 40 கிலோ மீட்டர் தூரம் வரையில் நடந்தே சென்று வேறு பகுதிகளில் இருக்கின்ற குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் அவர் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
அவரால் களத்தில் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் விவரங்களை காவல்துறையினர் தீவிரமாக சேகரிப்பு வருகிறார்கள். அதோடு இது குறித்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.