உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த இளம் பெண்ணுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த ஜாவித் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி அந்த பெண்ணை ஜாவித் மும்பைக்கு கடத்திச் சென்றுள்ளார். அந்த பெண்ணை மும்பைக்கு கடத்தி சென்ற ஜாவித் அவரை அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து ஜாவித் திருமணம் செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த பெண்ணை ஜாவித் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து கடந்த 23-ம் தேதி காலனிகஞ்ச் பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டு ஜாவித் தப்பிச்சென்றுள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என ஜாவித் மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை தனது மகள் கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜாவித் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.