fbpx

‘நம்ம தனிக் குடித்தனம் போலாம்….” சென்னைக்கு அழைத்த மனைவி வர மறுத்த கணவன்! மனைவி செய்து விபரீத செயல்!

தனி குடித்தனம் வருவதற்கு கணவர் சம்மதிக்காததால் ஏற்பட்ட மன விரக்தியில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் பிரமிச்சு பாளையத்தைச் சார்ந்தவர் சின்ரெல்லா. 21 வயதான இவர் சேலத்தைச் சார்ந்த நவீன் குமார் என்ற கொத்தனார் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் சிண்ட்ரெல்லா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்த சின்ரெல்லா தனக்கு குழந்தை பிறந்த பிறகு அலுவலகத்திற்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென இவர் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் வெகு நேரமாகியும் இவரது வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் குணமாக காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரதமர் சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிண்ட்ரல்லா தனது கணவர் நவீன் குமாரை தன்னோடு வந்து சென்னையில் தங்கியிருக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் நவீன் குமார் இதற்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறது.

Rupa

Next Post

'பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லை'..!! சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்..!!

Wed Apr 12 , 2023
பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில், விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு சென்ட் நிலம் வைத்து இருந்தாலும், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அது உங்களது தான் என்று சொல்லும் துறைதான் வருவாய்த்துறை. சான்றிதழ்கள் வழங்குவது பெரிய பணி என்று தெரிவித்தார். ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்க […]
'பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லை'..!! சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்..!!

You May Like