திண்டுக்கல் மாவட்டம், அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களின் எட்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் விட்டின் அருகில் உள்ள சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்றுக் கொண்டு, வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (50) என்பவர் வந்துள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை பார்த்தவர் முகமதரபீக் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார். பிறகு சிறுமியின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி, சக்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து அடைத்துள்ளார். இதைபார்த்த அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஐஸ் வியாபாரி முகமதுரபீக்கை பிடித்துவைத்துவிட்டு.
இது தொடர்பாக கூம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகமதுரபீக்கை கைது செய்தனர். வேடசந்தூர் அருகே சிறுமியை கட்டி வைத்து கடந்த முயன்ற சம்பவத்தால், ஐஸ் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.