தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைக்கும் விதமாக, உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் 2️ கோடி பேரவை திமுக அதில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இத்தகைய நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது தமிழக முழுவதும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை துவங்க வேண்டும், அதிலும் அதிக அளவில் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவாக இருக்கிறது.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை ஆரம்பித்து வைத்து பேசிய அவர், தெருதெருவாக சென்று உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுகவிற்கு எதிராகவும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகவும் தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.