fbpx

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள் துப்பாக்கியை கையில் எடுத்த காவல்துறையினர்…..! சரணடைந்த முக்கிய குற்றவாளி……!

கோயமுத்தூர் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து, கோவை மாநகரில் இருக்கின்ற ரவுடிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுவரையில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தப்பி சென்றவர்களை துப்பாக்கியால் சூட்டும் காவல்துறையினர் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பல்வேறு குற்ற வழக்குகளின் தொடர்புடைய கவுதம் என்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இத்தகைய சூழலில் கௌதமின் நண்பர் ஒருவரை காவல் துறையினர் சூட்டு பிடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான கௌதம் தன்னை காவல் துறையினர் என்கவுண்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள், என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறுகிறார். இது ஒருபுறமிருக்க கௌதமியின் மனைவி மாமியார் மற்றும் அக்கா போன்றோரை காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், கோவையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கௌதம் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டு இருக்கிறார்கள். பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த பெண் வினோதினி தலைமறைவாக இருக்கின்ற நிலையில், மிக விரைவில் அவரும் சரணடைவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

”சோடாவுல இதெல்லாமா போடுவீங்க”..!! முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

Thu Mar 9 , 2023
விசித்திரத்துக்கும் விநோதத்துக்கும் புகலிடம் என ஒன்று இருக்குமானால் அது சமூக வலைதளங்களை தவிர வேறு எதுவும் இருக்காது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது இயற்கைக்கு மாறான செயல்களை செய்து, அதையே ட்ரெண்ட் ஆக்குவதில் சமூகவலைதள பயனர்களுக்கு அத்தனை ப்ரியமாக இருக்கிறது. குறிப்பாக உணவு வகைகளை வித்தியாசமாக கொடுக்கிறேன் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களெல்லாம் அடடே போடும் உணவு பிரியர்களையே அட ச்சை என சொல்லும் அளவுக்கே இருக்கும். அந்த […]
”சோடாவுல இதெல்லாமா போடுவீங்க”..!! முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்..!! வைரலாகும் வீடியோ..!!

You May Like