புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு தகுந்தார் போல் ஒர்க் அவுட் திட்டங்களை தருகிறேன் எனக் கூறி வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில் அந்த உடற்பயிற்சிக்காக புகைப்படங்களை அனுப்பிய பெண்களுக்கே வேறொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து குறுஞ்செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றில் என்னுடன் நிர்வாண வீடியோ கால் பேசவில்லை என்றால் உங்களது புகைப்படங்கள் அனைத்தையும் மார்பிங் செய்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக அந்த செய்தியில் எழுதி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பெண்கள் புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரணையை தொடங்கினார். அவரது விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் பெண்களுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டவர் ஒரு பெண்ணே இல்லை என்று அதிர்ச்சியான உண்மை தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த நபரின் பெயர் திவாகர் என்பதும் 22 வயது இளைஞரான அவர் முந்திலால்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.