fbpx

காதலனை சந்திக்க இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்!

தற்போதைய இளம் தலைமுறை இடையே காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அதீத ஆர்வமே பல சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

திருமணம், காதல் என்றால் தற்போதைய இளம் தலைமுறையினர் ஒரு கமிட்மென்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அது கமிட்மெண்ட் அல்ல ஒரு பொறுப்பு என்பதை தற்போதைய இளைஞர்களும் சரி, இளம் பெண்களும் சரி உணர்ந்து கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் குண்டட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சார்ந்த மோகன்ராஜ் என்ற 19 வயது இளைஞனுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆகவே இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.

இது தொடர்பாக கேள்விப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரின் அடிப்படையில் மோகன்ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் உடுமலையைச் சேர்ந்த மோகன்ராஜ் உடன் சிறுமிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

அந்த தம்பதிக்கு 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது, கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, சிறுமி 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 19ஆம் தேதி மதியம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறைந்த வாலியில் 2 வயது சிறுவன் தினேஷ் மூழ்கி விட்டதாக தெரிவித்து உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகு குண்டட்டம் காவல் துறையினர் காவல் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவன் தினேஷின் தாயாரிடம் விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள். அப்போது தினேஷின் தாயும், காதலன் மோகன்ராஜும் திட்டமிட்டு குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்திருக்கிறது. உண்மை வெளிவந்தவுடன் காவல்துறையினர் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறைக்குச் சென்ற மோகன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்தவுடன் மறுபடியும் காதலியுடன் பழகி வந்திருக்கிறார். வழக்கிற்கும் இருவருடைய தொடர்புக்கும் இடையூறாக இருப்பதாக நினைத்துதான் குழந்தை தினேஷை இருவரும் சேர்ந்து தீர்த்து கட்டி இருக்கிறார்கள் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Next Post

ஆன்லைன் செயலியில் கடன்..!! ஆபாச படத்துடன் வெளியான புகைப்படம்..!! திடீரென மாயமான பெண்..!!

Thu Dec 22 , 2022
ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படத்தை மோசடி கும்பல் ஒன்று, மார்பிங் செய்து அதை உறவினர்களுக்கு அனுப்பிய நிலையில், அந்தப் பெண் தற்போது காணாமல் போயுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் வெங்கடாச்சலம். இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடாசலம் காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடிக்க கோரி நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் […]
ஆன்லைன் செயலியில் கடன்..!! ஆபாச படத்துடன் வெளியான புகைப்படம்..!! திடீரென மாயமான பெண்..!!

You May Like