fbpx

பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஏல சீட்டு அலுவலகத்தில் தீக்குளித்தவர் பரிதாபமாக உயிரிழப்பு…..! சென்னையில் சோகம்….!

சென்னை கருகம்பாக்கம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (56) எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகின்ற இவர் எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார் பாதி சீட்டு கட்டிய நிலையில், சீட்டு முதிர்வடையும் வரையில் சுப்பையாவால் சீட்டு பணத்தை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே சீட்டிலிருந்து விலகிக் கொள்வதாகவும் 15 மாதங்களாக தான் கட்டிய 50,000 ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்குமாறு செல்வத்திடம் அவர் தொடர்ந்து கேட்டு வந்ததாக தெரிகிறது. ஆனாலும் செல்வம் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாக சொல்லப்படுகின்றது. இதில் வேதனைக்கு ஆளான சுப்பையா கடந்த 30ஆம் தேதி இரவு 7 மணி அளவில் செல்வத்தின் அலுவலகத்திற்கு சென்று அங்கேயே தீ குளித்தார்.

தீயின் வலியால் துடித்து அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த சுப்பையா அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரை எரியும் தீயுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார் இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது காயத்ரி கேகே நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

சுப்பையாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். காயத்ரிக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

சென்னையில் பயங்கரம்…..! ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த கார் ஓட்டுநர் அதிரடி கைது…..!

Wed Apr 5 , 2023
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாலு(50). இவருடைய அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல்(30) இவர் கார் ஓட்டுனராக இருக்கிறார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எத்தகைய நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் […]

You May Like