fbpx

சென்னை கோயம்பேட்டில் போலீசார் திடீர் சோதனை…..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் கடந்த 8ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கோயம்பேடு காவல்துறையினர் திடீரென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் அந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதோடு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு சமயங்களில் பல்வேறு திருட்டு, வழிப்பறி செயின் பறிப்பு மற்றும் பைக்திருட்டு, கஞ்சா பொட்டலங்கள் விற்பனை கள்ள சந்தையில் மது விற்பனை மற்றும் குட்கா விற்பனை வழித்தவை அதிகரித்து வருவதாக கோயம்பேடு காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கோயம்பேடு சந்தை பகுதிகளில் தஞ்சம் அடைந்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இதனை தடுக்கும் விதமாக, கோயம்பேடு காவல்துறையினர் 30-க்கும் அதிகமானோர் அதிகாலை சமயங்களில் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள் கடந்த 3 தினங்களாக இந்த சோதனை நடந்து வருகிறது.

இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 30க்கும் அதிகமான காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். அந்த பகுதிகளில் இருக்கின்ற கடைகள், மொட்டை மாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் வியாபாரிகள், கூலி தொழிலாளர்களாக இல்லாதவர்கள் உள்ளிட்டோரை கண்டுபிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ச்சியாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஈரோடு இடைத்தேர்தல் ஆதரவு யாருக்கு…! பா.ஜ.க எடுத்த அதிரடி முடிவு….!

Sun Jan 22 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறவினர் திருமகன் கடந்த 4ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார்.இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வெளியிட்ட கட்சி கரடியை நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போட்டிக்கான பணிகளில் ஈடுபட்டிருக்க நாங்களும் போட்டியிடுவோம் என்று பன்னீர்செல்வம் தரப்பும் தெரிவித்து […]

You May Like