சென்னை அருகே நற்குன்றத்தை சேர்ந்த மகேஷ் தன்னுடைய தாய் அத்தியம்மாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தன்னுடைய தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் தயாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அதனை தடுக்க வந்த அண்டை வீட்டாருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை அல்லி குளத்தில் இருக்கின்ற மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி எச் முகமது ஃபாரூக் குற்றம் சுமத்தப்பட்ட மகேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார்.