பெண் குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் விடுத்து வருகின்றனர்.பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனமாக இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு சில கொடூர சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இதையெல்லாம் அரசாங்கங்கள் பார்த்தும் பார்க்காததை போல செயல்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.அதே சமயம் பெண் பிள்ளைகள் ஆண் நண்பர்களுடன் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாக கருதப்படுகிறது.
அப்படி எச்சரிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு பல சமயங்களில், பல விதங்களில் பல சிக்கல்கள் நேரிடுகிறது.அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேட்டூர்ணிமடம் பகுதியில் சேர்ந்தவர் அபிஷேக் 22 இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த போது சக மாணவி ஒருவரிடம் அவர் நெருங்கி பழகியுள்ளார்.
அவ்வப்போது அந்த மாணவியை நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியிடம் அபிஷேக் கொடுத்ததாக கூறப்படுகிறது இதனை குடித்த அந்த மாணவி, சிறிது நேரத்தில் மயங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் அபிஷேக் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார்.அதோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்து இருக்கிறார். மயக்கம் தெளிந்த பின்னர் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அத்துடன் இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அபிஷேக் அந்த மாணவியை மிரட்டி இருக்கிறார் இதன் காரணமாக, அந்த மாணவியும் பயந்து போய்விட்டார்.இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு பெருத்த அவமானம் என்று நினைத்த அந்த மாணவி தன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடம் நடந்த விடயத்தை தெரிவிக்கவில்லை. இதற்கு நடுவே கல்லூரி படிப்பு முடிவடைந்தது.
ஆனாலும் அதற்குப் பின்னரும் கூட அபிஷேக்கின் மிரட்டல் அந்த மாணவியை பின் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இந்த மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதிருக்கிறார்.இதைக் கேட்டு பதறிப்போன அந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது இதற்கு நடுவே படிப்பை முடித்த அபிஷேக் துபாய் நாட்டிற்கு வேலைக்காக சில தயாராக இருந்தார்.
இந்த விடயம் தெரிந்த பின்னரும் கூட அவர் வெளிநாட்டிற்கு செல்ல தயாரானார். அதன் பிறகு அவர் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் அவரை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
அதோடு இந்த விவகாரம் தெரிந்த பின்னரும் கூட அவருடைய தந்தை வில்சன் குமார் அபிஷேக் வெளிநாட்டுக்கு அனுப்பியது தெரிய வந்தது.இதனை அடுத்து அவர் மீதும் அபிஷேக்கின் இந்த கொடூர செயலுக்கு, உடனடியாக இருந்த அவருடைய நண்பர் அனீஸ் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அபிஷேக் துபாய் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருப்பதாக நாகர்கோவில் மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.