fbpx

உள்ளாட்சித் தேர்தலில் எதிர்த்து நின்று வெற்றி பெற்றதால் உண்டான முன்பகை….! ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் சுட்டுக்கொலை….!

நாட்டில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் அதாவது, சட்டசபை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக, உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது பணம் மட்டும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது, மத்தியபிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் இருக்கின்ற பச்சேராக கிராமத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பிறகு காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர்களின் பெயர்கள் ஹக்கீம், கோலு மற்றும் பிங்கு என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த மூவரும் பச்சேரா கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக, இவர்களுக்கும் நிஷாந்த் தியாகி என்பவரின் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் நிஷாந்த் தியாகி தரப்பை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரையும் கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு நடுவே நிஷாந்த் தியாகி தரப்பினர் திடீரென்று தலைமறைவாகினர்.

இவர்களை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் இருவர் பலி..!! அடுத்தடுத்த சம்பவத்தால் பெரும் சோகம்..!!

Mon Jan 16 , 2023
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரரும், திருச்சியில் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் […]
ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் இருவர் பலி..!! அடுத்தடுத்த சம்பவத்தால் பெரும் சோகம்..!!

You May Like