ஒரு காலத்தில் தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா? என்று கேட்கும் அளவிற்கு பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் படுமோசமாக இருந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் அதிமுக இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி என்றால் பாஜக தான் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அந்த கட்சி வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
இதற்கு முழுமுதற் காரணம் பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது பேசும் இடம் அவர் விடும் அறிக்கைகளில் உள்ள தெளிவு, அவர் பேசும் பேச்சில் உள்ள தெளிவு இவையெல்லாம் சேர்ந்துதான் பாஜகவை தமிழகத்தில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தற்சமயம் ஒய் பிரிவு பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு தற்சமயம் இசட்ப்பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த பாதுகாப்பு அதிகரிப்பால், 20க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். என்றும் அண்ணாமலை வீடு அவர் தங்குமிடம் மற்றும் அவர் செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோக்கல் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,மாவோயிஸ்ட்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் அவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 2 தினங்களாக மத்திய உள்துறையை சார்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலையின் வீடு போன்ற பல்வேறு இடங்களில் வந்து சோதனை நடத்தி சென்றுள்ளனர் இதற்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் வாங்கப்பட்டுள்ளது.