கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தது. அப்போது திடீரென்று குறுக்கிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார், இதனால் திடீரென்று மேடை அமைதியானது.
அதன் பின்னர் கன்னட வாழ்த்து பாடல் ஒலித்தது. ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்தியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து வலைதள பதிவில் கருத்து தெரிவித்திருக்கின்ற திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தமிழ் தாய் வாழ்த்து பாடலை இழிவு படுத்தும் விதத்தில் செயல்படும் பாஜகவினரை தடுக்க இயலாத அண்ணாமலை தமிழ் மக்கள் தொடர்பாக எப்படி கவலைப்படுவார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பதவித்துள்ள அண்ணாமலை ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கிராம் வாடிய பின்னர் தான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி எனவும், அந்த நியதையை தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும் திமுகவின் மறைவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்களுடைய ஒரே பணி இன்று தன்னுடைய வலைதள பதிவில் கூறி இருக்கிறார் அண்ணாமலை.