fbpx

பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டிய பாஜகவை சேர்ந்த நபர் கைது….!

திருச்சியை சேர்ந்த ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார். மேலும் இவர் தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து கட்சியில் சேரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரை போல பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

சென்னையைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் ஒருவரின் மனைவி திருச்சியை சேர்ந்த இவரிடம் நண்பரை போல பழகி கணவர் எடுக்கும் திரைப்படத்திற்கு பணம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்காக முன் தொகை கொஞ்சம் தேவைப்படுவதாகவும் தெரிவித்து பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது.

ஜெயராம் பாண்டியன் ஏமாற்றுவதை அறிந்து கொண்ட அந்த பெண் சென்னையில் இருக்கும் தன்னுடைய கணவரிடம் இது தொடர்பாக தெரிவித்து இருக்கிறார், இயக்குனர் காவல் துறையில் இது தொடர்பாக புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராம் பாண்டியனை அலை வீசி தேடி வந்தனர். இதனை அறிந்து கொண்ட அவர் திடீரென்று தலைமறைவானார்.

இந்த நிலையில், வெகு நாட்களாக காவல்துறையினருக்கு தண்ணீர் காட்டி வந்த அவர், திருச்சியில் பதுங்கி இருப்பதை அறிந்து கொண்ட சென்னை காவல்துறையினர் அவரை ஜாதகமாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை, கொலை மிரட்டல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் அவர் கட்சியில் சேரும் பெண்களிடம் நண்பரை போல பழகி மோசடி வேலையில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் ஜெயராம் பாண்டியன் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறார்? எவ்வளவு பணம் மோசடி செய்திருக்கிறார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது தமிழக அரசு பள்ளிகள்…..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!

Mon May 1 , 2023
நேற்று தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கழிவறை மற்றும் குடிநீர் […]
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ’ஸ்மார்ட் கிளாஸ்’...! சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

You May Like