ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மறுத்து போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனையே அவர் பயணம் மேற்கொள்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படுவதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு பார்வை மங்கிப் போவதாகவும், நாக்கு மறுத்து போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கிய பிறகு புட்டினின் தொடர்பில் அவருடைய நகர்வுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. ஒரு சமூக ஊடக பக்கம் தற்சமயம் அவர் வலது கை மற்றும் காலில் பாதி அளவு உணர்ச்சியை இழந்துள்ளார் என்று அந்த சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாம்.
ஆகவே அவருடைய இந்த நிலையில், புட்டியின் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தி இருப்பதாகவும், அவருடைய மரணம் நெருங்கி விட்டதா? என்று அவர்கள் பயத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் ரஷ்ய நாட்டை சார்ந்த அந்த சமூக ஊடகப் பக்கம் மட்டுமல்லாமல் ஸ்பெயின் நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட தகவலிலும் 70 வயது நிரம்பிய விளாடிமிர் புட்டின் பார்க்கின்சன் நோய் மற்றும் புற்றுநோயின் தொடக்க நிலைகள் உள்ளிட்ட இரண்டையும் எதிர்கொண்டு வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலேயே அந்த ரஷ்ய சமூக ஊடகமும் புட்டினின் தற்போதைய நிலை தொடர்பாக தங்களுடைய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது